விளாத்திகுளம் அருகே பள்ளியின் முப்பெரும் விழா: பள்ளி மாணவ மாணவிகளின் அசத்தலான கலை நிகழ்ச்சிகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளம் நாடார் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்த நாள் விழா நாடார் ஆரம்ப பள்ளி ஆண்டு விழா மற்றும் நாடார் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி மாணவ மாணவிகளின் நடன மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சியாக நடைபெற்றது, விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவில் பள்ளிச்செயலாளர் சண்முகராஜ் வரவேற்புரையாற்றினார். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை செல்லத்தாய் பள்ளியின் ஆண்டறிக்கை வாசித்தார்.
ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளிச் செயலர் சண்முகராஜ் ரூபாய் 500 வீதம் அவர்களின் பெற்றோரிடம் வழங்கினார். பத்தாம் வகுப்பு ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு பொருளாளர் குமரேசபாண்டி ஊக்கத்தொகை வழங்கினார்.
10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அருண்குமார் செல்வ பாரதி ஆகிய இருவருக்கு சென்னை உறவின்முறை தலைவர் தங்கதுரை தங்க நாணயம் வழங்கினார். ஆரம்பம் மற்றும் உயர்நிலைப்பள்ளி படிப்பு விளையாட்டில் முதலிடம் பெற்ற மூவருக்கு தங்கம் வெள்ளி வெண்கலம் என தங்க ஈஸ்வரப் பாண்டியன் வழங்கினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் புஷ்பராஜ் பாக முகவர் அந்தோணி உட்பட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரிய – ஆசிரியயைகள்,மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முப்பெரும் விழாவிற்கு வந்த மாணவ மாணவிகள் பொதுமக்கள் என அனைவருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.