விளாத்திகுளம் அருகே ஜமீன் செங்கல்படை கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டம்:2000 மரக்கன்றுகள் நட்டி அசத்தல்!


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் செங்கல்படை கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவர்  ரவீந்திரன் தலைமையில் கிராம சபை பொதுக்கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நீதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, மக்கள் திட்டமிடல், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்,இதர பொருட்கள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தினை தொடர்ந்து ஜமீன் செங்கல்படை கிராம ஊரணியில் சுமார் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன, இந்தக் கூட்டத்தில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கற்பகம்,  மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள், அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தின் முடிவில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர், இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நல் நூலகர் விஜயன் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்  என்பது குறிப்பிடத்தக்கதாகும்…