எட்டயபுரம் அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் காயம்.





தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து போரிலோவன்பட்டிக்கு  லிங்கம்பட்டி, கடலையூர், வீரப்பட்டி, முத்தலாபுரம் வழியாக அரசு பேருந்து கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.  இன்று வழக்கம் போல 20க்கும் மேற்பட்ட பயணிகளை  ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி உள்ளது. பேருந்தினை ஓட்டுனர் சகாயராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். சங்கர் என்பவர் நடத்துவதாக பணியாற்றியுள்ளார். பேருந்து வீரப்பட்டி அடுத்து சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன் பகுதியின் அடி பகுதியில் இருந்த பட்டையில் போல்டு , நட்டு கழண்டு விழுந்தால் பேருந்து நிலைதடுமாறி அருகில் இருந்த சாலை ஓர பள்ளத்தில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த முத்தலாபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமி சுப்புத்தாய் மற்றும் பொன்னையபுரத்தை சேர்ந்த சின்னம்மாள் ஆகியோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் சகாயராஜ் தக்க சமயத்தில் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்து விபத்துக்குள் அணையில் இருந்து பயணிகள் ஆட்டோக்கள் மூலம் தங்களது கிராமங்களுகு சென்றனர்.