விளாத்திகுளம் -  குளத்தூர் பகுதி வாகன ஓட்டிகளுக்கு ஒரு நற்செய்தி!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து துளசிபட்டி,மீனாட்சிபுரம், குமாரபுரம், மந்திகுளம், மார்த்தாண்டம்பட்டி, அயன்செங்கல்படை, கோட்டநத்தம், புளியங்குளம், பூசனூர்,குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பகுதி வாகனஓட்டிகள், தங்களது இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களுக்கான  பெட்ரோல்,டீசல் எரிபொருள் நிரப்புவதற்கு மதுரை சாலை மற்றும் எட்டயபுரம் சாலைகளுக்கு சென்று பெட்ரோல் டீசல் நிரப்புவதற்கு நேரம் அடுத்து அவஸ்திபட்ட வந்த நிலையில், விளாத்திகுளத்தில் இருந்து குளத்தூர் செல்லும் பகுதிகளில் உள்ள பயன நேரத்தை குறைக்கும் வகையில், விளாத்திகுளம் துளசிப்பட்டியில் ஆதித்யா உதித்தியா கேபிள் நெட்வொர்க் திரு.முத்துகணேஷ் -அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றியசெயலாளர் செல்வி நேதாஜியின் துளசிபட்டிகிராமத்தில் " செல்வி பெட்ரோல் பல்க் " திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது, இந்த திறப்பு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், தேவர்மகாஜன சங்கத்தலைவர் சக்திவேல், இந்தியன் ஆயில்  முதன்மை மேலாளர் கங்காதர் ராணா, மதுரை மண்டல தலைமை மேலாளர், ராஜபாண்டி, மேலாளர் செந்தில்குமார், விற்பனை அலுவலர் சித்தார்த் பத்ரா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.