எட்டையாபுரத்தில் விவசாயி வீட்டில் தங்க நகை மற்றும் கார் திருட்டு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரின் மகன் சக்திவேல் (56), இவர் தற்போது எட்டையாபுரம் சண்முகாநகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் விவசாய பணிக்காக கோட்டநத்தம் செல்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25-10-2025 அன்று கோட்டநத்தம் கிராமத்திற்கு சென்றவர் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் சக்திவேல் வீட்டின் அருகே உள்ள பண்டாரம் என்பவர் இன்று காலை சுமார் 06.00 மணிக்கு நடைபயிற்சி சென்றவர் சக்திவேலின் வீட்டின் இரும்பு கேட் உடைக்கப்பட்டு இருந்ததையும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திருடு போனதை கண்டு சக்திவேலுக்கு தொலைபேசியில் பண்டாரம் தகவல் தெரிவித்துள்ளார்.


இதனை அடுத்து எட்டையாபுரம் வீட்டிற்கு வந்த சக்திவேல்  வீட்டின் இரும்பு கேட் உடைக்கப்பட்டு வீட்டின்  இரவில் இருந்த தங்கமோதிரம்,தங்கநாணயம் உள்ளிட்ட 5 1/2 பவுன் தங்க நகை மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாருதி அஸ்டார் கார் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருடு போன நகையின் மதிப்பு ரூபாய் 1லட்சத்து 65 ஆயிரம் என்று கூறப்படுகிறது.