விளாத்திகுளம் அருகே ஆடு திருடியவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கூத்தனூரணி கந்தசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி(68), என்பவர் வீட்டின் முன்பு கடந்த ஜனவரி 3ஆம் தேதி கட்டப்பட்டிருந்த 2 ஆட்டினை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து முனியாண்டி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததில், ஆடுதிருட்டியில் ஈடுபட்ட தூத்துக்குடி செல்வநாயகிபுரம் பகுதியை சேர்ந்த அம்பிராஜ் என்பவரின் மகன் அஜித்குமார்(28) என்பவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.