உங்களின் பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு தாருங்கள் : விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் உற்சாகத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுகவினர்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் இருக்கும் நிலையில்,தமிழக முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள்,பொதுமக்கள்,பனைத்தொழிலாளர்கள்,மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்து அதிமுகவினர் மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளான காமராஜர் பகுதி 13-வது வார்டு மற்றும் 14வது வார்டு பகுதிகளில் “தொண்டர் புடைசூழ” வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தங்களின் பொன்னான வாக்குகளை தருமாறு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன்,மகேஷ்,பால்ராஜ், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மேற்கு ஒன்றியதலைவர் சிவகாமசுந்தரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த்,மருதுபாண்டி, அம்மா பேரவை வரதராஜ பெருமாள், பாஜக நிர்வாகி கந்தசாமி,அதிமுக நிர்வாகிகள் வேல்முருகன், முனியசாமி மகளிர் அணி சாந்தி,பிரியா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.