விளாத்திகுளத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் : தமிழகத்திலேயே முதல்முறையாக  அதிக அளவில் கலந்து கொண்ட 116 ஜோடி மாடுகள்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், விளாத்திகுளம் வட்டார விஸ்வகர்மா மக்கள் சார்பாக, திரையுலக முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் விஸ்வகர்மா ஆதாரனை   ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது, சின்னமாடு,பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், ராமநாதபுரம், சிவகங்கை,தேனி, கம்பம்,புதுக்கோட்டை,திருநெல்வேலி, விருதுநகர்,மதுரை போடி,தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 116 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சிரிப்பாய்ந்தன, நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் மாட்டு வண்டிகள் ஒன்றை ஒன்று சீறிப்பாய்ந்து முந்தி செல்லும் காட்சிகளை சாலையின் இரு புறமும் என்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் போட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்று வருகிறது, ஆனால் அதிகப்படியாக 65 முதல் 70 ஜோடி மாடுகள் மட்டுமே இதுவரை போட்டியில் கலந்து கொண்டன,ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் மட்டும்தான் 116 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன என்று மாட்டுவண்டி எல்கைப்பந்தய சங்கத்தினர் கூறியுள்ளனர்.விழாவுக்கான ஏற்பாட்டினை கோவில் குமரட்டையாபுரம் பாலகுரு குருராஜ் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.