மகளிர் தினம் மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மெகா கோலப்போட்டி!
வெற்றியாளர்களுக்கு வாஷிங் மெஷின், LED டிவி,ஏர்கூலர், மிக்ஸி உள்ளிட்ட பரிசு பொருட்களை காயத்ரி ரகுராமன் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுயும் வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர்தின விழாவை முன்னிட்டு எட்டையாபுரத்தில் மெகா கோலப்போட்டி அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் மற்றும் அதிமுக நிர்வாகி மனோஜ் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது, இதில்100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விதவிதமான ரங்கோலி கோலங்கள்,மற்றும் தேசியத் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் MGR,ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி முண்டாசுக்கவிஞர் பாரதி, இரட்டைஇலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களான தொட்டில் குழந்தை திட்டம்,அம்மா உணவகம், அம்மா குடிநீர், தாலிக்கு தங்கம், அம்மா மருந்தகம், அம்மாலேப்டாப், அம்மா மின்விசிறி, அம்மா மிக்சி, அம்மா கிரைண்டர் உள்ளிட்டவை கோலமிட்டு காண்பித்தனர்.
போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகையும் அதிமுக மகளிர் அணி மாநில துணைச்செயலாளருமான காயத்ரி ரகுராம் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுஆகியோர் கலந்துகொண்டு கோலங்களை பார்வையிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாஷிங் மெஷின்,LED டிவி,ஏர் கூலர்,மிக்ஸி கிரைண்டர், மின்சார அடுப்பு,செல்போன் உபகரணங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்தனர்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.