விளாத்திகுளம் அருகே அரசு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூபாய் இரண்டு லட்சம் திருடிய  ஒரு பெண் உள்பட நான்கு பேர் கைது!




தூத்துக்குடி கே வி கே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாடசாமி, இவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் விளாத்திகுளம் அருகே உள்ள கூத்தலூரணி கிராமத்தில் இருந்த நிலத்தை விற்பனை செய்துவிட்டு , அதில் கிடைத்த ரூ. 2 லட்சம் பணத்துடன் விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளனர்.  


பேருந்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில் குளத்தூரையடுத்த வேடநத்தம் அருகே பேருந்து சென்ற போது மகேஸ்வரி பேக்கில் வைத்திருந்த 2 லட்ச ரூபாய் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையெடுத்து உடனடியாக குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையெடுத்து போலீசார் பேருந்து சென்ற வழி பகுதியில் விசாரணை நடத்தி வந்தனர். இப்போது குறுக்குச்சாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். 




விசாரணையில் அவர்கள் நாகர்கோவில் பார்க்கிங்கால் பகுதியைச் சேர்ந்த துரை, அவரது மனைவி பேச்சி, தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த ரஞ்சித் குமார், பரமன்குறிச்சி சீருடையார்புரத்தை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பதும் , 4 பேரும், மகேஸ்வரி பேக்கில் இருந்து ரூ. 2 லட்சத்தை திருடியது தெரியவந்தது. இதையெடுத்து அவர்களிடமிருந்து ரூபாய் இரண்டு லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார்  4 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.