எட்டயபுரம் அருகே  சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!


சென்னை கொளத்தூர் வெற்றி நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன்(45), பழனி (45), வனிதா(37) வசந்தி(40) சந்தியா(15), பிரதீப் (13) குமார் ஆகிய 6 பேரும் கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து காரில் கிளம்பி திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று வந்துள்ளனர்.


பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருச்செந்தூருக்கு கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது,


தூத்துக்குடி to மதுரை தேசிய நெடுஞ்சாலை  எட்டையாபுரம் அருகே உள்ள மு.கோட்டூர் விளக்கு அருகே சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே பாஸ்கரன் ஓட்டுநர் பழனி, வனிதா,வசந்தி, உள்ளிட்ட நான்குபேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து எட்டையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காயம் அடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் விபத்துக்கான காரணம் ஓட்டுநர் பழனி தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.