எட்டயபுரம் பேருந்து நிலையத்தில் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி மகாகவி பாரதியார் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகம் சேதமடைந்து காணப்பட்டதால் அதனை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில் கட்டிடத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 - ந்தேதி திடீரென பெயர்ந்து விழுந்தது. இதையெடுத்து ரூ.92- லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து வணிக வளாகம் கட்டுவதற்கான பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.