இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சத்யாவை ஆதரித்து, விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட செட்டியார்தெரு,பிள்ளைமார் தெரு, தேவர்தெரு, ஆசாரிமார்தெரு உள்ளிட்ட பகுதிகளில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,கழக இலக்கிய அணி செயலாளருமான சின்னப்பன்,கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று மக்களிடம் அதிமுக தேர்தல் வாக்குறுதி துண்டுப்பிரச்சாரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி நகரசெயலாளர் மாரிமுத்து, அதிமுக நிர்வாகிகள் வரதராஜபெருமாள், ராமநாதன் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.