மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேட்டுப்பட்டி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியவிளாத்திகுளம் முன்னாள் MLA சின்னப்பன்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டு தங்களின் உடைமைகள் அனைத்தையும் இழந்து, பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பிரமுகர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள்,  வணிக அமைப்பினர் உட்பட ஏராளமானோர்  தங்களால் முடிந்த நிவாரண பொருட்களை  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  மேட்டுப்பட்டி மக்களுக்கு விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அரிசி, சமையல் பொருட்கள், துணிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார், புதூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி இணை செயலாளர்  M. K சுரேஷ்குமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்