விளாத்திகுளம் அருகே நடைபெற்ற கபடி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற 60வது ஆண்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் வருமான கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் விளையாடிய அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி ஆட்டத்தை தொடக்கி வைத்தார். இதில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர். மேலும் கபடி போட்டியை தொடங்கி வைத்த சிறிது நேரம் கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உடன் சேர்ந்து கண்டுகளித்தார்.