விளாத்திகுளம் அருகே தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபடி போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில், கோவில் கொடை விழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும்  கபடி போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கபடி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமான பார்வையாளர்களுடன் சேர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற கபடிப்போட்டியை கண்டுகளித்தார்.





தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் கொடை விழா மற்றும் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. லீக் ஆட்ட முறையில் நடைபெற்ற இப்போட்டியில், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அணிகளும் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கபடி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தென்னிந்திய அளவிலான கபடிப்போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர், இரு அணிகளுக்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தை பார்வையாளர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தார். குளத்தூரில், கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த தென்னிந்திய அளவிலான மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டியை, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்து ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மேலும் 3 நாட்கள் நடைபெறவுள்ள  இப்போட்டிக்கான இறுதி ஆட்டமானது 20-07-2025 அதிகாலை நடைபெறும் என்றும், அதன்பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பை வழங்கப்படும் என்றும் விழாக்கமிட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.