எட்டையாபுரத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78 - வது பிறந்தநாள் விழா!
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78- வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரால் இன்று கொண்டாடப்பட்டு, அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் தற்போதைய தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜு அறிவித்தலின்படி,எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டில்,எட்டையாபுரம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு எட்டையாபுரம் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.