முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்திய முன்னாள் அதிமுக MLA!



மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவியும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளத்தில், வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ ஆலோசனையின் பேரில், விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார்.

இதையொட்டி விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் சின்னப்பன் உட்பட கட்சியினர் மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய செயலாளர்கள்  இராமச்சந்திரன்,மகேஷ், பால்ராஜ், மாரிமுத்து, மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் பிரியா, கழகப் பேச்சாளர் இளங்கோ உட்பட அதிமுக நிர்வாகிகள் சாந்தி, ஆசைத்தம்பி, சண்முகச்சாமி என பலர் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.