விளாத்திகுளம் அருகே டிடிவி தினகரன் மற்றும் திமுகவை பங்கம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பசுவந்தனையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ, வைகைச் செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாட்டினை ஓட்டப்பிடாரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரும், அதிமுக ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான காந்தி (எ) காமாட்சி செய்திருந்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் நிழலின் அருமை வெயிலில் தெரியும்,திமுக ஆட்சியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சரியில்லை ,கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிய ஆட்சி தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி , 2026 தேர்தல் அதிமுகவிற்கு சாதகம், திமுகவிற்கு பாதகம்.2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை திருப்பி தாக்கும் ஏவுகணை தான் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் தான் என்றும் உதயநிதி மட்டுமல்ல இன்ப நிதி வந்தாலும் ஏற்றுக் கொள்ள கூடிய நிலையில் இருப்பதாக திமுக மூத்த அமைச்சர்கள் புலம்பும் நிலை உள்ளது என்றார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில இலக்கிய அணி செயலாளருமான வைகைச் செல்வன் பேசுகையில்,அதிமுக ஆளும் கட்சியாக வெகு காலம் இல்லை - இன்னும் 10 மாத காலம் தான் உள்ளது,திமுக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை,ஆனால் அதிமுக தொடர்ந்து 3 முறை ஆட்சிக்கு வந்துள்ளது.கூட்டணி வைக்கமால் திமுக ஆட்சி பிடித்தது இல்லை.கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடித்தது அதிமுக
கட்சி உடைந்து விட்டதாக கூறுகின்றனர். அதிமுக தொடங்கியது முதல் பிரச்சனை இருந்து வருகிறது.அமமுக கறிக்கோழி கொழு கொழு வளரும், முட்டை போடாது, குஞ்சு பொறிக்காது டிடிவி தினகரன் சட்டமன்ற தேர்தலில் முட்டையோடு, போய் விட்டார்,ஜம்மு காஷ்மீர், உபி, ஆந்திராவில் வாரிசுகள் முதல்வராக வந்து போன்று தமிழகத்தில் கருணாநிதிக்கு பிறகு ஒரு கழிச்சடை, அதன் பிறகு ஒரு துணை கழிச்சடை ஆன்லைன்ல முடிக்க வேண்டியதே அமெரிக்கா போய் முடித்த அறிவாளி நம்ம முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கு சைக்கிள் ஓட்ட முடியமால் சிகாகோவில் சைக்கிள் ஓட்டி பார்க்கிறார் என்றார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.கே பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் மகேஸ், அன்புராஜ், தனஞ்செயன்,தனபதி, மாவட்ட நிர்வாகிகள் கருப்பசாமி, தேவேந்திரன்,வெம்பூரார்,C. மாரிமுத்து, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி, பசுவந்தனை நகர செயலாளர் சுப்பையா புலவர், முருகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்ஆர்வி கவியரசன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் கார்த்திக் மற்றும் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெயராம் சத்தியமூர்த்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.