காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த  வனத்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய வனகாவலர்கள் நியமனம்: விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சத்யா வாக்குறுதி!



தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில்  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  வடக்கு முத்துலாபுரம், தோழமலைப்பட்டி, இனாம் அருணாசலாபுரம்,கருப்பூர்,சுப்புலாபுரம், வீரப்பட்டி,தெற்கு முத்தலாபுரம்,கோட்டூர் காலனி,கோட்டூர் கீழநம்பியாபுரம், பொன்னையாபுரம், மேலநம்பியபுரம், ரகுராமபுரம்,வவ்வால் தொத்தி,புதுப்பட்டி சமத்துவபுரம் வன்னிகுளம்,பள்ளிவாசல்பட்டி,நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் சத்யா பேசுகையில், 

விளாத்திகுளம் பகுதியில் பயிரிடப்பட்டிருக்கும் மக்காச்சோளம் உளுந்து பாசி உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும்   பண்றிகளால் விவசாயிகள் கடந்த ஐந்தாண்டுகளாக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்,காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த  ஆட்சி அமைந்த உடன் வனத்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய வனகாவலர்கள் நமது பகுதிக்கு நியமிக்கப்படுவார்கள்...


வைப்பார் -  அச்சன்கோவில் நதியினைப்பு திட்டம் அதிமுக ஆட்சி வந்த உடனே செயல்படுத்தப்படும்...


விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி நீர் தேக்க அணையில் இருந்து நாகலாபுரம் வரை  துண்டிக்கப்பட்ட கால்வாய்  மீண்டும் சரி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் புதூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன்,அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் மோகன்,கரிசல் பூமி வரதராஜன், அதிமுக நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.