இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூபாய் 6 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் மூட்டைகள் பறிமுதல் - ஒருவர் கைது போலீசார் விசாரணை - விளாத்திகுளம் அருகே பரபரப்பு!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் கடத்தப்பட இருப்பதாக கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வேம்பார்  கடலோர காவல் படையினர் கடற்கரை சாலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது வேம்பார் சோதனை சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதி வேகமாக வந்த பொலிரோ பிக் அப் வாகனத்தை கடலோர காவல் படையினர் நிறுத்தி சோதனையை விட்ட போது 32 மூட்டைகள் வெளிநாட்டு சிகரெட் இருப்பதும், அவை கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து சுமார் 6 கோடி 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள  வெளிநாட்டு சிகரெட் மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை வேம்பார் கடலோர காவல் படையினர் மறை முதல் செய்தனர். 



மேலும் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அகஸ்தியர் புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (52) என்பவரையும் கைது செய்தனர். இலங்கைக்கு வெளிநாட்டு சிகரெட்  மூட்டைகளை அனுப்பியது யார்? யாருக்கு செல்கிறது? 




இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து கடலோர காவல் படையினர் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராஜேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்தப்பட விருந்த ரூ 6 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் மூட்டைகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை  ஏற்படுத்தி உள்ளது.