கடந்த 5 ஆண்டுகளாக மக்களோடு மக்களாக பயணித்து மக்களில் ஒருவனாக இருந்துள்ளேன் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் பிரச்சாரம்!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையேன் சுப்பிரமணியபுரம்,பட்டியூர், பிள்ளையார்நத்தம்,சொக்கலிங்கபுரம்,கழுகாசலாபுரம், குமாரசுப்ரமணியபுரம்,தங்கம்மாள்புரம்,தலைக்காட்டுபுரம், துரைச்சாமிபுரம், நீராவிபுதுப்பட்டி, படர்ந்தபுளி,ராமனூத்து உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கடந்த 5 ஆண்டுகளாக நான் மக்களோடு மக்களாக உங்களுக்காகவே பணி செய்துள்ளேன். பிள்ளையார்நத்தம் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கட்டுங்கள் புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது,அதேபோல் பேவர் பிளாக் சாலை நியாய விலை கடை, விவசாயிகளுக்கான வருடம் வருடம் அடி உரம்,இடுபொருள், விவசாய உபகரணங்கள் ஆகியவை பயிர் காலங்களில் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் பல்வேறு கிராமங்களுக்கு சாலை அமைக்கப்படாமல் உள்ளது,கழக ஆட்சி வந்த உடன் மீண்டும் பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு புதிய தார்சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.