விளாத்திகுளம் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு : ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்..!



 நேற்றைய தினம் முதல் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கீழ் பாலத்தின் மேல் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வருதால் வைப்பாற்று கரையோர பகுதிகளில் உள்ள சிதம்பரம் நகர், காமராஜ் நகர், எட்டயபுரம் ரோடு, மீரான் பாளையம் தெரு, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் நேரம் செல்ல செல்ல தண்ணீரின் வேகம் அதிகரித்து வரக்கூடிய இந்த சூழ்நிலையில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் பாலத்தின் மீது தண்ணீரில் நடந்துகொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கும் காட்சிகளை காண முடிகிறது. அதனால் உடனடியாக விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், வெள்ளம் கரைபுரண்டு ஓடும் கீழ்பாலத்தின் இருபுறங்களின் பறிக்காடுகள் அமைத்து பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்... இது தவிர வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலும், ஆற்றங்கரைகளின் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் பொதுமக்களையும் பாதுகாப்பாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..