தூத்துக்குடியில்ரூ ,1 .5 லட்சம் மதிபுள்ள 132 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 5 பேர் கைது!
தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 132 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது, இதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட பூபால்ராயபுரம் பகுதியை சேர்ந்த ராஜா(42),சுரேஷ்(40), விஜயகுமார்(26), எபனேசர்(32), சுந்தர்ராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த கார் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர், இதன் மதிப்பு சுமார் 1.5 லட்சம் ஆகும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஆய்வு செய்தார்.