விளாத்திகுத்தில் தனியார் நிறுவன பாதுகாப்பு ஊழியர்களுக்கு தீ தடுப்பு விளக்க பயிற்சி நடைபெற்றுது!



தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக துறை இயக்குநரின் உத்தரவுபடி அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும்,  தனியார் நிறுவன பாதுகாப்பு ஊழியர்களுக்கு தீ தடுப்பு விளக்க பயிற்சி நடைபெற்று வருகிறது. 


அதன்படி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தனியார் நிறுவன பாதுகாப்பு ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்வில் சிறப்பு நிலைய அலுவலர் பா.கேசவராஜன்  தலைமையில் நிலைய தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு உபகரணங்கள் கையாள்வது மற்றும் அவசர காலங்களில் செயல்படுவது குறித்து பயிற்சி நடைபெற்றது.பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கையேடுகள் தீயணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் வழங்கினார்.