உயிரிழந்த எட்டயபுரம் காவலர் குடும்பத்தினருக்கு நிதி உதவி!



தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முதல் நிலை காவலர்  தெய்வத்திரு. முகமது மைதீன் என்பவர் கடந்த 23.04.2025 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். மேற்படி முகமது மைதீன் அவர்களது குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கருணையுள்ளத்தோடு, அவருடன் 2011ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு ரூபாய் 25,63,000/- பணம் நன்கொடையாக பெற்று, அவற்றை நிரந்தர வைப்பு நிதி, காப்பீடு பத்திரங்கள் மற்றும் ரொக்கப் பணமாக இன்று (27.11.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து 2011ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மேற்படி முகமது மைதீன் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.