பாதி எரிந்த சடலத்தின் கைரேகையை கொண்டு விசாரணையை தொடங்கிய போலீசார் : மதுவிற்கு அடிமையான மகனை தந்தையே கொலை செய்து எரித்த வெறிச்செயல் : விளாத்திகுளம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குற்றச் சம்பவத்தின் பின்னணி...



கடந்த 29-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  சிதம்பராபுரம் to கோவில்பட்டி சாலை காட்டுப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், கோவில்பட்டி அருகே உள்ள கிளவிப்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் என்ற 22 வயது இளைஞனை அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிகளான செல்வகுமாரின் தந்தை மகேஷ்(47), சகோதரர்கள் அரவிந்த் (24), 18 வயது சகோதரர் (சிறுவன்) மற்றும் உறவினரான பாலகிருஷ்ணன் (37) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். 





தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிதம்பராபுரம் to கோவில்பட்டி செல்லும் பிரதான சாலை உள்ள காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக அவ்வழியாக விவசாய பணிக்கு சென்ற நபர்கள் எட்டையபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை பார்வையிட்டு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டு விசாரணையில் ஈடுப்பட்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை பார்வையிட்டு அப்பகுதியில் ஏதேனும் தடயங்கள் உள்ளனவா? என்று மாவட்ட எஸ்.பி. உட்பட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு விசாரணையை முடுக்கி விட்டார். அதுமட்டுமின்றி, சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் குறித்த விபரங்கள் தெரிய வராததால், இது கொலையா? தற்கொலையா? என்பதை முடிவு செய்வதிலும், விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதிலும் போலீசாருக்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இங்கு எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டு கொலையாளிகளால் இங்கு வந்து எரித்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கி உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் சிலர் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் தலைமையிலான தனிப்படையினர் காட்டுப் பகுதியில் பாதி இருந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரின் கைரேகையை எடுத்து அதிலிருந்து தங்களது விசாரணையில் தொடங்கினர். அந்த கைரேகையை காவல்துறையின் CCTNS PORTAL-ல் பொருத்திப் பார்த்ததுபோது எரிந்த நிலையில் சடலமாக கிடந்த நபர் கோவில்பட்டி அருகே உள்ள கிளவிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரது மகன் செல்வகுமார் (22) என்பதும், அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு ஒன்று உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.  சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் யார்? என்று தெரிய வந்தததைடுத்து அவரது சொந்த ஊருக்கு சென்ற போலீசார் அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதன் மூலம் போலீசாருக்கு செல்வகுமார் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. 


போலீசாரின் விசாரணையில்....

22 வயதான இளைஞன் செல்வகுமார் மது மற்றும் கஞ்சா போதைக்கு மிகவும் அடிமையாகி அவர் குடும்பத்தினருக்கு மட்டுமன்றி அக்கம் பக்கத்தினருக்கும் பெரும் தொல்லையாக இருந்து வந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் பலமுறை கண்டித்தும் தனது போதைப்பழக்கத்தை கைவிடாத செல்வக்குமாரால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் கடந்த 29-ஆம் தேதி செல்வகுமாரை, அவரது தந்தை மகேஷ், சகோதரர்கள் அரவிந்த், 18 வயது சிறுவன் மற்றும் அவர்களது உறவினர் பாலகிருஷ்ணன் ஆகியோரில் மதுரையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காரில் சென்று கொண்டிருந்தபோது செல்வகுமார் அவர்களிடம் போதையில் மீண்டும் சண்டையிட்டு, உங்களை எல்லாம் கொன்று விடுவேன் இன்று மிரட்டியிருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை மகேஷ் உட்பட அனைவரும் செல்வகுமாரை காரில் இருந்தபடியே துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு செல்வகுமாரின் சடலத்துடன் காரில் சிதம்பராபுரம்  to கோவில்பட்டி சாலை காட்டுப்பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி வந்து செல்வகுமாரை எரித்துள்ளனர்.  இதனை முதலில் போலீசாரின் விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக சமாளித்துக் கொண்டிருந்த செல்வகுமாரின் குடும்பத்தினரிடம், அவர்கள் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கும் சிசிடிவி ஆதாரத்தை காண்பித்தவுடன் குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு.... செல்வகுமாரால் தங்கள் நாள்தோறும் பல்வேறு தொல்லைக்கு ஆளாகி வந்ததாகவும், அவனது குடி பழக்கத்தை விட மறுத்ததாலும்தான் ஆத்திரத்தில் இவ்வாறு செய்துவிட்டோம் எனக் கூறியுள்ளனர். 


பின்னர், போலீசார் குற்றவாளிகளான செல்வகுமாரின் தந்தை மகேஷ்(47), சகோதரர்கள் அரவிந்த் (24),  sujan (19) சகோதரர்  மற்றும் உறவினரான பாலகிருஷ்ணன் (37) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவர்களை சிறையிலடைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு எரிந்த சடலத்தின் கைரேகையைக் கொண்டு இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.