பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி புதூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் பகுதியில் பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உளுந்து பாசி போன்ற பயிர்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்தது போல மிளகாய் உள்ளி( சின்ன வெங்காயம்) கொத்தமல்லி, சோளம், கம்பு மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கும் அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், கடும் வறட்சி காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு மற்றும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்,2024 -25 நிதியாண்டில் அரசு அறிவித்த இழப்பீடுத் தொகை விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விரைந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதூர் வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் புதூர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.