விளாத்திகுளம் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் மனு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் இன்று வெம்பூர் அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதற்காக வருகை தந்த தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் மனுவை அளித்து தங்களது பகுதியில் சிப்காட் அமைக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தனர். விவசாயிகளிடம், மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் கீதா ஜீவன், பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றார்.