விளாத்திகுளம் பகுதிகளில் உரங்களை பதுக்கி வைத்து வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதாக விவசாயிகள் புகார்:கூட்டுறவு சங்கங்களில் உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க அரசு வழிவகை செய்ய விவசாயிகள் கோரிக்கை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் இந்தாண்டு இப்பகுதி விவசாயிகள் மிளகாய், கம்பு, சோளம்,மக்காச்சோளம், மல்லி,வெங்காயம், உளுந்து,பாசிப்பயறு ஆகியவற்றை பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய், வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் விளாத்திகுளம்,புதூர், நாகலாபுரம், எட்டயபுரம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உரக்கடைகளில் விவசாயிகள் டிஏபி மற்றும் யூரியா உரங்கள் வாங்க சென்றால், ஒவ்வொரு கடைகளிலும் ஒவ்வொரு விலை விற்கப்படுவதாகவும், அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பதாக விவசாயிகள் கூறுகின்றனர், அதுமட்டுமின்றி வாங்கப்பட்ட உரங்களுக்கு முறையான பில் கொடுப்பதில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அதிகாரிகள் உரக்கடைகளில் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் அதேபோல் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி உரங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Vilathikulam
அதிக விலைக்கு உரம் விற்பனை... கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பறையடித்து வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி!
அடுத்த
சந்தன மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026