விவசாயம் செய்யாத நபர்களுக்கு காப்பீட்டு அடங்கல் வழங்கிய கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,புதூர்,எட்டையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2024 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழைக்கு மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் கடும் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தினர். ஓராண்டுக்கு பின்னர் கடந்த 13.01.26 அன்று உளுந்து,பாசி, வெங்காயம், மிளகாய், கொத்த மல்லி பயிரிட்ட விவசாயிகளுக்கு எத்தனை ஏக்கர் பரப்பளவில் பயரிட்டு இருந்தாலும் அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு ஐந்து ஏக்கருக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதனடிப்படையில் கடந்த 13ந் தேதி முதல் விவசாயிகள் வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. அரசு விடுவித்த நிவாரண தொகை குறைத்து அனுப்பி உள்ளதாகவும், அதனால் 5 ஏக்கர் உடைய விவசாயிக்கு நிவாரண தொகையில் 80% மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதுஅதில் இன்னமும் பல கிராமங்களில் முறையாக விவசாயிகளுக்கு நிவாரணம் வந்து சேரவில்லை. அதே போல் விவசாயம் செய்யாத நபர்களுக்கு காப்பீட்டு அடங்கல் வழங்கிய கிராம நிர்வாக அலுவளரால்  விவசாயிகள் மிகவும் மன உளைச்சலில் உள்ளனர். தவிர சில கிராம நிர்வாக அலுவலர்கள் நிவாரணம் பெயர் பட்டியலில் பலரது பெயர்களை திட்டமிட்டு விட்டு விட்டனர். இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். சில விவசாயிகள் உரிய ஜெராக்ஸ் நகல் கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்தும் தவறாக வங்கி கணக்கு என் ஆதார் என், வங்கி ஐ.எப்.எஸ்.சி என் தவறாக பதிவிட்டுள்ளனர். இதுகுளறுபடி போன்ற தவறுகளால் விவசாயிகள் வங்கி கணக்கிற்கு அரசு விடுவித்தும் நிவாரணம் கிடைக்கவில்லை. இது போன்ற பல்வேறு காரணங்களால் தாமதப்படுத்தும் விளாத்திகுளம் வட்டாச்சியர் கண்டித்து இன்று  விளாத்திகுளம்  அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர், இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் உங்கள் கோரிக்கைகளை வட்டாட்சியரிடம் சொல்லுமாறு அறிவுறுத்தினார், அதனைத் தொடர்ந்து  விவசாயிகளை சந்தித்த வட்டாட்சியர் கண்ணன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், அப்போது விவசாயிகள் விவசாயம் செய்யாத நபர்களுக்கு விவசாய பயிர் காப்பீடுக்கான அடங்கள் வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக இங்கு வர சொல்ல வேண்டும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் அடங்கல் நகல், வங்கி கணக்கு, ஆதார் நகல் ஆகியவற்றுடன்  வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அப்போது காவல்துறை ஆய்வாளர் சக்திவேல் விவசாயிகளிடம் ஆவேசமாக பேசியதால் ஆவேசமான  விவசாயிகள் அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அனைவருக்கும் முறையாக காப்பீட்டுத் தொகை வரவு வைக்க வேண்டும், விவசாயம் செய்யாதானவர்களுக்கு விவசாய அடங்கல் வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து   கலைந்து சென்றனர்.