எட்டையாபுரம் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக பரவலான சாரல் மழை - மழையின் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த சின்னவெங்காயம், உளுந்து,பாசி உள்ளிட்ட விவசாய பொருட்கள் பாதிப்பானதால் விவசாயிகள் கவலை.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கமும் இரவில் குளிரும் அதிகமாக இருந்து வந்தது. பகல் நேரங்களில் வெப்பம் இருந்த காரணத்தினாலும், அதுமட்டுமின்றி இரவு நேரத்திலும் பனிமூட்டம் குளிர் தாக்கம் இருப்பதால் பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
அதேபோல் இன்றும் காலை முதல் மாலை வரை வழக்கமான வெப்பத்தின் தாக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மட்டுமின்றி,பரவலான சாரல் மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்லச் செல்ல இரவிலும் இடியுடன் கூடிய பரவலான சாரல் மழை பெய்து வருகிறது சிந்தலக்கரை, மேலக்கரந்தை, மாசார்பட்டி, அயன் ராசாப்பட்டி, முத்தலாபுரம், தாப்பாத்தி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்யும் பரவலான சாரல் மழை இந்த ஆண்டில் முதல் மழையின் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த சின்னவெங்காயம், உளுந்து,பாசி உள்ளிட்ட விவசாய பொருட்கள் பாதிப்பானதால் விவசாயிகள் கவலை.