தொடர்ந்து 4 ஆண்டுகள் மிளகாய் வத்தலுக்கு விலை இல்லாததால் விவசாயிகள் கவலை: உரிய கொள்முதல் விலையை நிர்ணயிக்க இல்லையென்றால் தற்கொலை செய்வோம் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை!




ஆந்திர மாநிலத்திற்கு அடுத்தபடியாக  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் மானாவரி மழை யை நம்பி மட்டும் அதிக அளவில் குண்டு வத்தல்  சாகுபடி செய்யப்பட்டு வருகிறது,இங்கு சாகுபடி செய்யப்படும் மிளகாய் குண்டு வத்தல்கள், பாகிஸ்தான் ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு காலங்காலமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது, கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின்,கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் உள்ள மிளகாய் விவசாயிகளிடம் வியாபாரிகள் முன்வந்து மிளகாய் வத்தலை வாங்க யாரும் முன்வரவில்லை, இதனால் புதூர் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் 2020 ஆம் ஆண்டு முதல், வாடகை வாகனத்தை பிடித்து  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர்,இதைக் காரணமாக பயன்படுத்தி அங்குள்ள வியாபாரிகள், ஒரு குவின்டால் ரூபாய் 25 ஆயிரத்திற்கு  விற்கப்பட்ட குண்டு மிளகாய் கடந்த நான்காண்டுகளாக 7000 ரூபாய் முதல் அதிகப்படியாக 12 ஆயிரம் வரை மட்டுமே அடிமட்டத்திற்கு வாங்குகின்றனர்.

குறிப்பாக மிளகாய் சாகுபடிக்கு  இரண்டு கோடை உளவு,விவசாய உளவு அடி உரம், கலப்புஉரம், மூன்று முறை கலை எடுத்தல், மூன்று முறை மிளகாய் பழம் பறித்தல் என சுமார் 8 மாதம் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்யும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.



ஒரு முறைக்கு ஒரு ஏக்கருக்கு 30ஆள் வீதம், மூன்று முறை களை எடுக்க வேண்டும், ஒரு ஆள் கூலிக்கு 500 முதல் 600 வரை சம்பளம் கொடுக்கும்  நிலை உள்ளது,அதேபோல் மிளகாய் பழம் பறிக்கும்  போதும் மூன்று பறிப்புக்கும் சேர்த்து  ஒரு ஏக்கருக்கு சுமார் 100 ஆட்கள் வரை தேவைப்படுகிறது, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிராமப் பகுதிகளில் 100 நாள் வேலை நடைபெறுவதால், மக்கள் பலர் 100 நாள் வேலைக்கு செல்வதால், புதூர் பகுதி விவசாயிகள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருநாழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், அதிகப்படியாக ஆள் கூலி கொடுத்து  தற்போது விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




ஒரே வழியாக மிளகாய் பழத்தை வெயிலில் பறித்து காய போட்டால், தற்போது பருவம் தவறி பெய்யும் "திடீர் திடீர்" மழையின் காரணமாக காய போட்ட மிளகாய் வத்தல் அனைத்தும் மழை நீரில் நனைந்து, போலி வத்தலாக மாறி விடுகின்றன. அவ்வாறு மாறிய மிளகாய் வத்தல்களை விருதுநகர் சந்தைக்கு எடுத்துச் சென்றால் அங்குள்ள வியாபாரிகள்,அந்த மலையில் நனைந்த மிளகாய் வத்தலை வெறும் 15 ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு வாங்குகின்றனர், கடந்த நான்காண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருகிறது.



கடந்த நான்காண்டுகளாக விவசாய பொருட்களுக்கு முறையான காப்பீடு மற்றும் இழப்பீடு தொகை அரசு வழங்கவில்லை என்ற குற்ற சாட்டை வியாபாரிகள் முன்வைக்கின்றனர், அதேபோல் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு விலையை நிர்ணயம் செய்யும் தமிழக அரசு,மிளகாய் வத்தலுக்கும்  ரூபாய் 25,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று புதூர் மற்றும் விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாக தொடர் வீழ்ச்சியை சந்தித்து வரும் புதூர் பகுதி விவசாயிகள் இதே போல் நிலைமை  தொடர்ந்து நீடித்து வந்தால் கந்தசாமிபுரம் பி.ஜெகவீரபுரம்,புது சின்னையாபுரம், சேவைக்காரன்பட்டி, சங்கராப்பநாயக்கன்பட்டி,துரைச்சாமிபுரம், சென்னம்பட்டி, மாதலாபுரம்,பூதலாபுரம் மாவிலோடை, வெங்கடாசலபுரம்,காடல்குடி, சுப்பையாபுரம், ராமச்சந்திராபுரம்,சுந்தர பச்சையாபுரம், லட்சுமிபுரம்,சின்னுர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நாங்கள் ஊரை விட்டு காலி செய்வோம் அல்லது, விஷம் அருந்தி தற்கொலை செய்வோம் என்று கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.