விளாத்திகுளம்அருகே டீசலை மிச்சப்படுத்த ஆசைப்பட்ட விவசாயி - டிராக்டர் கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதல் - பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிராக்டர் சேதம் - விவசாயி படுகாயம்.
மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கிரானைட் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. கண்டெய்னர் லாரியை மாரியப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்அருகே சோழபுரம் பகுதியில் வந்து போது சோலாபுரத்தைச் சேர்ந்த உழவு பணி செய்துவிட்டு சுப்புராஜ் என்பவர் ஓட்டி வந்த டிராக்டரும் - கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் ஒட்டி வந்த விவசாயி சுப்புராஜ் காயமடைந்தார். மேலும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள டிராக்டர் முற்றிலுமாக சேதம் அடைந்தது. விபத்து குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 கிலோ மீட்டர் தூரத்தை குறைத்து டீசலை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக. வழக்கமாக செல்லக்கூடிய பாதையில் செல்லாமல்,, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டு டிராக்டர் சேதமடைந்துள்ளது. டீசலை மிச்சப்படுத்த வேண்டும் என்று நினைத்த விவசாயிக்கு அவருடைய டிராக்டர் சேதமடைந்து மட்டுமின்றி, அவருக்கும் காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
Vilathikulam
டிராக்டர் கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதல்
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை !
அடுத்த
திருப்பூர் குமரனின் 120வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026