விளாத்திகுளம் அருகே கதிர் அடிக்கும் இயந்திரம் ஏறி விவசாயி உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கசவன்குன்று கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் கருப்பசாமி (48), இவர் சுரைக்காய்பட்டியில் உள்ள தனது விவசாய நிலத்தில் கதிர்அடிக்க இயந்திரத்தை வரவழைத்து கதிர் அடித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இயந்திரம் பின்னோக்கி ஓட்டுனர் இயக்கியபோது கருப்பசாமி மீது இயந்திரம் ஏறி கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த எட்டையபுரம் போலீசார் கருப்பசாமி உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாமாந்தல் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் அழகுவேல் (50) என்ற கதிர் அடிக்கும் இயந்திர ஓட்டுனரிடம் எட்டயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.