விளாத்திகுளம் அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சோழபுரம் - கோடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் சந்திரவேல்(60), விவசாயி ஆன இவர் தனது வீட்டு வாசலில் பாய் விரித்து படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, அப்போது அவரை எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து உள்ளது, இதனை அடுத்து அவரது மகன் ஜெயக்குமார் சந்திரவேலை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார், அங்க பரிசோதித்த மருத்துவர் சந்திரவேல் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர், இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.