"மகளிருக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அண்ணனின் ஆட்சி அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" : எட்டயபுரத்தில் மகளிர் தின விழாவில் சபதமேற்ற தவெக கட்சி நிர்வாகிகள் ! 



சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய நிர்வாகி சங்கரலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள், மகளிரணியைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி வண்ணத்தில் உருவாக்கப்பட்ட கேக்கை கட்சியில் உள்ள மகளிரை வைத்து வெட்டச் செய்து கேக் மற்றும் இனிப்புகளை பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், ஆட்டோ டிரைவர்கள், கடை வியாபாரிகள், மாணவர்கள் என அனைவருக்கும் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோன்று கட்சியில் உள்ள பெண் நிர்வாகிகள் உட்பட கட்சியினர் அனைவரும், "மகளிருக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அண்ணனின் ஆட்சி அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்று சபதமேற்றுக்கொண்டனர். மேலும், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய நிர்வாகி சங்கரலிங்கம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பெண்ணியம் போற்றும் விதமாக சிறப்புரையாற்றினர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எட்டையபுரம் பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பெண் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடப்பட்ட இவ்விழாவானது பலதரப்பினரின் பாராட்டுக்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எட்டயபுரம் பேரூர் தலைமை நிர்வாகி மணி, மீனாட்சி கிளை மகளிர் நிர்வாகி ராஜலட்சுமி, இளம்புவனம் கிளை மகளிர் நிர்வாகி ராஜகுமாரி, நகர மகளிரணியைச் சேர்ந்த ராமுத்தாய், சுமதி, நிஷா, கவிதா, பாரதி, பிரியா, மாரீஸ்வரி, எட்டயபுரம் நகர நிர்வாகிகள் முருகன், மாரிமுத்து, குணசேகர், மாரிமுத்து, பரமேஷ், பொன் மரகதராஜா, வழக்கறிஞர் லக்ஷ்மணன், விக்னேஸ்வரன், மணிகண்டன், அருண் பிரசாத் உன் லிட்டர் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.