தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் 37 பயனாளிகளுக்கு வேலை செய்யும் ஆணையை எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் வழங்கினார்!
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் உள்ளன, அவற்றில் பிரதமர் ஆவாஸ் யோஜனா (PMAY) முதன்மையானது. இது ஏழை மக்களுக்கு வீடு கட்ட மானியம் மற்றும் நிதி உதவி வழங்குகிறது.
இந்த திட்டத்தின் கீழ், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தகுதியுள்ள பயனாளிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டப்படுகின்றன. தமிழ்நாட்டில் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் போன்ற திட்டங்களும் உள்ளன, அவை ஊரகப் பகுதிகளில் வீடற்ற ஏழைகளுக்கு வீடு வழங்குகின்றன.
வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணை வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி மன்ற வளாகத்தில் நடந்தது நிகழ்ச்சிக்கு எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன் தலைமை தாங்கினார் பேரூராட்சி அலுவலக இளநிலை உதவியாளர் ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தார் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் உத்தரவை எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் வழங்கினார் இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.