எட்டையாபுரம்
தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட ஈராச்சி கிராம ஆதிதிராவிட மக்கள்! தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஈராச்சி
கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த
நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன,இப்பகுதியில் அடிப்படை பிரச்சனைகளான வாறுகால்
வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி ஆகியவை முறையாக கடந்த சில வருடங்களாக செய்து கொடுக்கவில்லை
என்றும்,மேலும் இப்பகுதி
மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும்,புகார் அளித்தனர்.
இதுவரை எந்தவித நடவடிக்கை
எடுக்கவில்லைஎன்று கூறி எட்டையாபுரம் தாலுகா அலுவலகத்தை அப்பகுதி மக்கள் மற்றும்
பாஜகவினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொதுமக்களின்
அடிப்படை பிரச்சனைகளை உடனே நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்,மேலும்
தொடர்ந்து வட்டாட்சியரிடம் கிராம மக்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க
முயன்றனர்,
அவர்களிடம்
வட்டாட்சியர் மல்லிகா, காவல் ஆய்வாளர்
ஜின்னா பீர்முகமது மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நடத்திய பேச்சு
வார்த்தையில் கிராம மக்களின் அடிப்படை
பிரச்சினை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
Vilathikulam
தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட ஈராச்சி கிராம ஆதிதிராவிட மக்கள்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஜக அண்ணாமலை சார்பில் மாற்றுத்திறனாளிக்கு எலக்ட்ரிக் தானியங்கி வாகனம்வழங்கப்பட்டது!
அடுத்த
பேரூராட்சி மன்ற தலைவி மீது பாய்ந்தது SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம்-வழக்குப்பதிவு செய்த காவல்துறை கைது செய்யாதது ஏன்?
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026