எட்டையபுரம் அருகே அரசு ஆரம்பப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா:இமாம் மற்றும் பட்டாச்சாரியர் கலந்து கொண்டு சிறப்பிப்பு!




தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் சமத்துவப் பொங்கல்  விழா கொண்டாடப்பட்டது.தமிழர் திருநாளாம் பொங்கல் விழா தை மாதத்தில் உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி இப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு  எட்டையபுரம் பள்ளிவாசல் இமாம் அஹமது ஜலால் தலைமை தாங்கினார்.எட்டையபுரம் பட்டாச்சாரியர் ரமேஷ் சாமிகள் முன்னிலை வகித்தார். மதங்களின் பண்டிகைகள் மனித உள்ளங்களின் மகிழ்ச்சிக்காவே கொண்டாடப்படுகிறது என்பதனைத் தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் எடுத்துரைத்தார்.  மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.கிராமப் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு,பழம் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டன.பள்ளி இடைநிலையாசிரியர் இந்திரா நன்றி கூறினார்.