விளாத்திகுளம் பகுதியில் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு : திமுக வேட்பாளர் மார்கண்டயேன் வாக்குறுதி!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் விளாத்திகுளம் திமுக வேட்பாளரும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினருமான மார்கண்டயேன் கீழஈரால்,மேலஈரால், வாலம்பட்டி, நற்கலைகோட்டை, T.சண்முகபுரம், புங்கவர்நத்தம், சோழபுரம், பொம்மையாபுரம்,முள்ளுப்பட்டி, குமரிக்குளம், விகாம்பட்டி, ஆத்திக்கிணறு, உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


வாக்கு சேகரிக்க வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையனுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அதனைத் தொடர்ந்து பேசிய மார்கண்டயேன் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில்மேலக்கரந்தை, தாப்பாத்தி, சோழபுரம், எப்போதும்வென்றான் உள்ளிட்ட 6 பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


இதனைத்தொடர்ந்து கீழஈரால் உட்பட மீண்டும் 9 பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்படும், அதற்கான பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல் விளாத்திகுளம் தொகுதியில் உள்ள 10 ஆயிரம் பெண்களுக்கு 12 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு செய்திட வருகின்ற ஆண்டுகளில் நான் ஏற்பாடு செய்வேன் என்று  உறுதியளித்தார்.   

இந்நிகழ்வில் தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதகண்ணன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் திமுகவினர் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.