நீண்ட நாள் பிரச்சனையை சரி செய்யாததால் தேர்தல்புறக்கணிப்பு : எட்டையாபுரம் அருகே வீடுகளில் கருப்பு கொடி கட்டியதால் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்துவாய்பட்டி கிராமம்,இந்த கிராமமக்கள் முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர், இந்த கிராமத்தின் மேற்கு பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுதோறும் மக்காசோளம்,உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த கிராமம் அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது, முகாமில் உள்ள குடும்பங்களுக்கு அரசு சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டடு அங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குளத்துவாய்பட்டி கிராம மக்கள் தங்களின் விவசாய நிலங்களுக்கு செல்லும் பொழுது இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் ஒரு சில நபர்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகளை மறைத்து இடையூறு செய்வதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாக முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை பலரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து குளத்துவாய்பட்டி கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது கண்டனங்களை எழுப்பி, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறியுள்ளனர்.