விளாத்திகுளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது தனியார் பேருந்து மோதி முதியவர் தலை நசிங்கி உயிரிழப்பு : பத பாதைக்கும் CCTV காட்சிகள் வெளியீடு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பனையடிப்பட்டி பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகன் அருள் நேசன் (60),மத போதகரானஇவர் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து தனது XL இருசக்கர வாகனத்தில் விளாத்திகுளம் சிதம்பர நகருக்க எட்டையாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற தனியார் பேருந்து அருள்நேசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அருள் நேசன் தலை மற்றும் கை நசுங்கி அருள் நேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் அருண் நேசனின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர், மேலும் விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் குறுக்குச்சாலை - வள்ளிநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் பெருமாள்சாமி (44) என்பவரை பிடித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்தான பத பதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன