எட்டயபுரத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 8 பேர் கைது..!



தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பாரதியார் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு பின்புறம் அமைந்துள்ள வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற எட்டயபுரம் காவல் நிலைய போலீசார், கமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் சின்ன கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான அந்த வீட்டை சோதனையிட்டதில் அங்கு சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து  போலீசார் உடனடியாக சட்டவிரோதமாக தயார் செய்ய பட்டாசுகளை பறிமுதல் செய்ததோடு, பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்ட சுப்பிரமணியன்(31), கார்த்தீஸ்வரன்(27), சரவணன் (28), கார்த்திக் (54), சின்ன கருப்பசாமி (53), ஐயப்பன் (39), அந்தோணி (70), சின்ன கருப்பசாமி (45) ஆகிய 8 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.