விளாத்திகுளம் அருகே மழை நீர் சூழ்ந்ததால்-கால்வாய் வசதி இல்லாததால் குளம் போல காட்சியளிக்கும் சாலை! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் மழை நீர் செல்வதற்கு முறையான கால்வாய் வசதி இல்லாததால், நாகலாபுரத்தில் இருந்து காடல்குடி செல்லும் சாலையில் முழங்கால் அளவு மழைநீர் குளம் போல தேங்கி காணப்படுகிறது. முழங்கால் அளவு தண்ணீரில் பெரும் சிரமத்திற்கிடையில்தான்... பொதுமக்கள் அங்குள்ள வங்கி மற்றும் மருத்துவமனைக்கு தண்ணீரில் இறங்கிதான் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் மழை நீர் தேங்கியுள்ள இச்சாலையை இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையை விழுந்து விபத்து ஏற்பட்டுவிடுமோ.... என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள TNEB டிரான்ஸ்பார்மர் மின் கம்பமும் பாதிக்குமேல் மழைநீரில் மூழ்கி பெரும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக துறைசார்ந்த அதிகாரிகள், துரிதமாக செயல்பட்டு உடனடியாக மழைநீர் செல்ல முறையான கால்வாய் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Vilathikulam
கால்வாய் வசதி இல்லாததால் குளம் போல காட்சியளிக்கும் சாலை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தீ விபத்து - 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் - போலீசார் விசாரணை.
அடுத்த
அறங்காவல் குழுவினருக்கு நியமன ஆணை வழங்கிய MLA மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026