பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்மம்: 5 லட்சம் லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி:சமூக விரோதிகளின் கூடாரமாக விளாத்திகுளம் காவல் உட்கோட்டம்:சட்ட ஒழுங்கை தீர்மானிப்பது காவல்துறையா? சமூகவிரோதிகளா?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 11ம் தேதி காட்டுப்பகுதியில் (17) வயது சிறுமி ஆடைகள் கலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கடந்த மார்ச் 16ம் தேதி அச்சிறுமியை காணவில்லை என்று பெற்றோர்கள் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், பெற்றோர் அளித்த புகாரினை குளத்தூர் காவல் நிலைய போலீசார் பெரிது படுத்தாமல் காலையில் போய் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர், இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அப்புகாரை அலட்சியப்படுத்தியதாக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை நெல்லை சரக டிஐஜி சரவணன் பணியிடை நீக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து குற்றவாளியை கைது செய்யாததை மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை குறுக்குச்சாலையில் சாலையை மறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் அமைப்பினர் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் குளத்தூர், குளத்தூர்காலனி,கல்மேடு, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று வரை போராட்டம் நடைபெற்று வந்தது.
17 வயது சிறுமி கொலை வழக்கில் 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டும் குற்றவாளிகள் தற்போது வரை கைது செய்யப்படவில்லை...
சில மாதங்களுக்கு முன்பு விளாத்திகுளம் அருகே தொழிலதிபர்கள் பெண்களுடன் உடலுறவு செய்யும் வீடியோவை காட்டி தொழிலதிபர்களை மிரட்டி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிதாக விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் அறிவழகன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது, பெண்ணின் ஆபாச வீடியோவை வெளியிட்டு " பெண்ணின் கண்ணியத்திற்கு பங்கம் " விளைவித்த அறிவழகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியலமைப்பினர் மற்றும் சமூக அலுவலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அறிவழகன் மீது அப்போது விளாத்திகுளம் டிஎஸ்பி யாக இருந்த அசோகன் உரிய நடவடிக்கை எடுக்காமல் அறிவழகனிடம் ரூபாய் 5 லட்சம் லஞ்சம் வாங்கி பெண்ணிய வன்மத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது...
அப்போதே பெண்களுக்கு எதிராக வன்மத்தை கட்டவிழ்த்து விட்ட அறிவழகன் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்வதற்காக இரு இளைஞர்கள் விளாத்திகுளத்தில் இருந்து சூரங்குடி நோக்கி கஞ்சாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானதில் ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர் பையில் சுமார் 1.5 கிலோ கஞ்சா இருந்ததும், அந்த இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் தற்போது வரை மௌனம் காத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதுபோதை மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்த இளைஞரை அவரது தந்தையே கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
விளாத்திகுளம் காவல் உட்கோட்ட பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை,தொடர் கஞ்சா விற்பனையினால் விளாத்திகுளம் பகுதியில் உள்ள இளைஞர் சமுதாயம் தற்போது போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் மது விற்பனை செய்பவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளித்தாள்,புகார் அளித்த பொதுமக்களையே சமூகவிரோதிகள் மிரட்டுவதாக கூறப்படுகிறது.
சட்ட ஒழுங்கு காவல்துறையினரிடம் உள்ளதா அல்லது சமூகவிரோதிகளிடம் உள்ளதா என்ற சந்தேகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.