எங்கள் குழந்தை கடந்த கோலத்தை பார்த்து அதிலிருந்து எங்களால் இன்னும் மீள முடியவில்லை - அரசியல் கட்சியினர் தொந்தரவு செய்ய வேண்டாம். காசு, பணமோ பதவியோ எதிர்பார்க்கவில்லை - நிம்மதியாக இருக்க விடுங்கள் - ஆறுதல் கூற வந்த ஆதவ் அர்ஜுனாவிடம் கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்மணி...
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி குடும்பத்தினரை தமிழகவெற்றிக கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது உள்ளே இருந்த அந்த சிறுமியின் அத்தை சுப்புலட்சுமி என்பவர் ஏற்கனவே துக்கத்தில் இருக்கிறோம்.
ஏன். அரசியல் கட்சிகள் வந்து தொடர்ந்து தொந்தரவு செய்கிறீர்கள். நீங்கள் (அரசியல்வாதிகள்)) வருவது பிடிக்கவில்லை. எங்கள் குழந்தை கடந்த கோலத்தினை பார்த்து எங்களால் அதிலிருந்து மீள முடியவில்லை. அவர் பெற்றோர் நொந்து போய் இருக்கின்றனர். அவர்களை நிம்மதியாக விடுங்கள். நீங்கள் வந்து பேட்டி கொடுத்துவிட்டு போய்விடுவீர்கள் ஆனால் காலம் பூரம் வேதனை படப்போவது அவளின் தாய் தான். நாங்க காசு, பணமோ பதவியோ எதிர்பார்க்கவில்லை. முக்கியமா கட்சிக்காரர்களை நாங்கள் நம்பவே இல்லை என்று கூறி அந்த பெண்மணி மயங்கிவிழும் நிலைக்கு வந்தார். பின்னர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை அமர வைத்தனர்.
அந்தப் பிள்ளை கிடந்த கொடுமையை பார்த்தீங்களா என்று தொடர்ந்து கண்ணீர் விட்டு ஆழத் தொடங்கினார்.இதைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை வெளியே இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.இதற்கிடையில் ஆதவ் அர்ஜுனா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் த. வெ. க. நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.