சென்னையில் கார் பந்தயத்திற்காக ரூ. 270 கோடி செலவு செய்து திமுக வீணடித்தது: விளாத்திகுளத்தில் சசிகலா தேர்தல் பிரச்சாரம் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன் பாண்டியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா விளாத்திகுளம் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது பேசிய சசிகலா.. ரூபாய் 12 லட்சம் கோடி கடன் பெற்று திமுக ஆட்சியை நடத்தி உள்ளது.
திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு முறையாக சீருடை வழங்கவில்லை.
விலையில்லா பேன் மிக்ஸி கிரைண்டர் என பெண்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.
அரசுக்கு வரக்கூடிய வருவாய் வேறு எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது.
பல்வேறு கிராமங்களில் பால வசதிகளை திமுக அரசு செய்து கொடுக்கவில்லை.
ஆனால் பெரிய நகரங்களில் மட்டும் பாலங்கள் கட்டிக் கொடுத்துள்ளனர் காரணம் அதில் அதிக வருவாய் வரும் என்று நினைத்து.
பெண்களுக்கு ரூபாய் 8000 கூப்பன் தருகிறோம் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று முதல்வரை கூறுகிறார்.
ஏப் 23ல் எங்களுக்கு ஓட்டு போட்டு விடுங்கள். கூப்பனை வாங்கிக்கொள்கள் என்று முதல்வர் கூறுகிறார்,இதனால் கடன் சுமை தான் அதிகரிக்கும்.
படித்த குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை.
மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். வீட்டு வரி சொத்து வரி உயர்ந்துள்ளது. இவற்றையெல்லாம் வைத்துவிட்டு ரூ. 1000 வழங்குவதாக திமுக அரசு கூறுகிறது.
நான் ஆட்சியில் அமர வைத்தவரும் திமுகவுக்கு இளைத்தவர் அல்ல,கழுத்தில் போட்டிருக்கும் துண்டில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவும் எவ்வளவு இணக்கம் என்பது தெரிகிறது.
திமுக பாணியிலேயே மக்கள் தவிக்க விடக்கூடாது என்பதற்காகவே இயக்கம் தொடங்கினேன்,
சென்னையில் கார் பந்தயத்திற்காக ரூ. 270 கோடி செலவு செய்து திமுக வீணடித்தது.
கார் பந்தயத்திற்கு பயன்படுத்திய பணத்தை மக்களுக்கு நல்லது செய்ய பயன்படுத்திருக்கலாம்..
விளாத்திகுளம் எட்டையாபுரம் அரசு மருத்துவமனையை தமிழக அரசு மேம்படுத்தவில்லை.
விளாத்திகுளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டவில்லை
தருவைகுளம் முதல் வேம்பார் வரை விதிகளை மீறி உப்பளங்கள் செயல்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விளாத்திகுளம் பகுதியில் மத்திய அரசு உதவியுடன் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது.
மத்திய அரசிடம் சண்டை போடுவது திமுக வேலையாக உள்ளது. பின்னர் எப்படி திட்டங்களை கொண்டு வருவார்கள்.
மத்திய அரசு தமிழகத்தை ஒதுக்கி வைத்துள்ளதாக அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.
தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆட்டுப் பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சட்டம் ஓழுங்கு சிறப்பாக இருந்தது.
அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள், கட்சியினர் காவல் நிலையத்திற்கு செல்லக்கூடாது அப்படி சென்றால் பதவி பறி போய்விடும் என்பதால் யாரும் செல்வதில்லை.
ஆனால் திமுகவில் இன்றைக்கு ஆங்காங்கே குறுநில மன்னர்களில் இருந்து தங்களுக்கு வேண்டியவர்களை பதவியில் அமர்த்திக் கொள்வதாக கூறினர்.
மக்களை பாதுகாக்க ஒரு முதல்வர் காவலராக இருக்க வேண்டும் என்றார்.