விளாத்திகுளம் அருகே பாஜக அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்! 



கடந்த நான்கரை மாதங்களாக 100 நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி ரூ.4034-கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்ககண்டேயன் கண்டன உரையாற்றினார். நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.