எட்டையபுரம் டாஸ்மாக்கில் திமுகவினர் அலப்பறை..!


தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் மேலவாசல் பகுதி, பேரூராட்சி அலுவலகம் எதிர்புறம் மற்றும் நாவலக்கம்பட்டி சாலையில் உள்ள 2 டாஸ்மாக் கடை உள்ளிட்ட நான்கு அரசு மதுபான கடைகளிலும் இன்று திமுக இளைஞரணி மாநாட்டிற்குச் சென்ற திமுகவினர் கூட்டம் அலைமோதியது.



இதில் கோவில்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள கடை மற்றும் மேலவாசல் பகுதியில் உள்ள கடைகள் முன்பு அதிக அளவில் கூட்டம் கூடியதால் இரவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் மேலவாசல் பகுதியில் உள்ள கடைக்கு வந்திருந்த கூட்டத்தை ஒழுங்கு படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். அதுமட்டுமின்றி வழக்கமாக இரவு 10 மணிக்கு பூட்டப்படும் கடைகள் இன்றைய தினம் திமுக கட்சியினரின் கூட்டத்தால் 15 நிமிடங்கள் முன்னதாகவே பூட்டப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த கட்சியினருக்கும் - டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது...